#IPL2022 : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் யார் தெரியுமா.? அணி நிர்வாகம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு வழக்கமாக விளையாடும் 8 அணிகள் மட்டுமல்லாமல் கூடுதலாக குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் என்ற 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த 10 அணிகளால் மொத்தம் 33 வீரர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.  ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 8 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 25 வீரர்களை வைத்துக்கொள்ளலாம். அதன்படி, பார்த்தால் இன்னும் 217 வீரர்கள் தேவைப்பட்டது. இவர்களை தேர்வு செய்ய ஐபிஎல் மெகா ஏலம் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்றது.

இதில், ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 12.25 கோடிக்கு ஸ்ரேயஸ் ஐயரை கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்தது‌. இதனையடுத்து அணி நிர்வாகங்கள் தங்களது கேப்டன்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2022 Kolkata knight riders captain shreyas Iyer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->