#IPL2023 : நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்ச் & ஊதா நிற தொப்பிகளை கைப்பற்றிய பெங்களூர் வீரர்கள்.!
IPL 2023 du plessis orange cap and Siraj purple cap
16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் கடந்த மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, ஏப்ரல் 28 வரை நடைபெற உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 74 போட்டிகள் நடைபெற உள்ளது. தற்போது லீக் சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று மாலை 3.30 மணிக்கு மொகாலியில் நடைபெற்ற 25வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
இதில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணிகள் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 59 ரன்களும், டூப்ளசிஸ் 84 ரன்களும் எடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 18.2 அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணியில் சிறப்பாக பந்து வீசிய முகமது சிராஜ் 4 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணியின் டூபிளசிஸ் (6 போட்டிகளில் 343 ரன்கள்) ஆரஞ்ச் நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார். அதேபோல் மற்றொரு பெங்களூர் அணி வீரரான முகமது சிராஜ் ( 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்) ஊதா நிற தொப்பியை கைப்பற்றியுள்ளார்.
English Summary
IPL 2023 du plessis orange cap and Siraj purple cap