#IPL2023 : விறுவிறுப்பாகும் ப்ளே ஆப் சுற்று.. மும்பைக்கு முட்டுக்கட்டை போட்ட லக்னோ.!
IPL 2023 LSG won by 5 runs against Mi
16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 31ஆம் தேதி தொடங்கிய நிலையில், தற்போதைய இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் இனிமேல் நடைபெறும் லீக் போட்டியும் மிகவும் முக்கியமாகும். இதில் தோல்வி அடையும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது மிகவும் கடினமாக இருக்கும்.
அந்த வகையில் டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆகிய இரு அணிகளும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 63வது லீக் போட்டியில் லக்னோ அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதில் லக்னோ அணியில் சிறப்பாக விளையாடிய ஸ்டோய்னிஸ் 89 ரன்கள் குவித்தார்.
அதனைத் தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றதன் மூலம் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் மீதம் தலா ஒரு போட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் லக்னோ அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறிவிடும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற போட்டிகளின் முடிவுகளை பொறுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா என்பது தெரியும்.
English Summary
IPL 2023 LSG won by 5 runs against Mi