முத்தான 3பேரை தட்டி தூக்கிய சென்னை! - Seithipunal
Seithipunal


17-வது ஐ.பி.எல். (2024) போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் துபாயில் இன்று நடந்து வருகிறது. மொத்தம் 333 வீரர்கள் இடம்பெற்றுள்ள இந்த ஏலப்பட்டியலில் 214 பேர் இந்திய வீரர்கள் உள்ளனர், 119 வீரர்கள் வெளிநாட்டை சேர்ந்த வீரர்கள் உள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரை 20.50 கோடி ரூபாய்க்கு சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஏலம் எடுத்துள்ளது.

இதேபோல் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செலை 14 கோடி ரூபாய்க்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

முன்னதாக ரச்சின் ரவீந்திராவை 1.80 கோடிக்கும், ஷர்துல் தாக்குரை 4 கோடி ரூபாய்க்கும் சென்னை அணி ஏலம் எடுத்தது.

டிராவிஸ் ஹெட்டை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டிய நிலையில் இறுதியாக ரூ. 6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி எடுத்தது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ரோவ்மன் பாவெலை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2024 Auction Daryl Mitchell and Rachin Ravindra Chennai Super Kings 


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->