இதுவே முதல் முறை! ரூ.3.6 கோடிக்கு ஏலம்! பழங்குடியின இந்திய இளம் வீரர் ராபின் மின்ஸ்! யார் இவர்?
IPL 2024 GT ROBIN
ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ரூ.3.6 கோடிக்கு பழங்குடியின இந்திய இளம் வீரர் ராபின் மின்ஸ் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
2024-ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் துபாயில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் மிட்செல் ஸ்டார்க்-யை இதுவரை இல்லாத அளவுக்கு அதிக தொகைக்கு ரூ.24.75 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்து.
இதேபோல் ஆஸ்திரேலியா வீரர் கம்மின்ஸ்-யை சன் ரைஸஸ் ஹைதராபாத் அணி 20 கோடிக்கு ஏலம் எடுத்து.
இதுமட்டுமில்லாமல், ரூ.20 லட்சம் அடிப்படையில் விலையில் அறிமுகமான சில இளம் இந்திய வீரர்களை சென்னை உள்ளிட்ட முன்னணி அணிகள் போட்டிபோட்டு கொண்டு கோடிகளை குவித்து வாங்க ஆர்வம் காட்டின.
குறிப்பாக சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி இந்தியாவின் இளம் வீரர் சமீர் ரிஸ்வி-யை 8.4 கோடிக்கு ஏலம் எடுத்தது
மேலும், 21 வயதான ராபின் மின்ஸ்-யை குஜராத் டைட்டன்ஸ் ரூ.3.6 கோடிக்கு வாங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ரூ.20 லட்சத்தில் ஏலம் தொடங்கியபோதே, பல அணிகள் ராபினை வாங்க முனைப்புக் காட்டின. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் என முன்னணி அணிகள் போட்டியிட, இறுதியில் ரூ. 3.6 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் ஏலம் எடுத்து.
இதன் மூலம் பழங்குடி இனத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவர் ஐபிஎல் வரலாற்றில் கால்பதிக்கும் பெருமைமிகு நிகழ்வும் அரங்கேறியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலம், கும்லா மாவட்டத்தைச் சேர்ந்தவரான ராபின் மின்ஸ், தற்போது ராஞ்சியில் உள்ள நம்கும் பகுதியில் வசித்து வருகிறார். ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவரின் தந்தை, ராஞ்சி விமான நிலையத்தில் காவலாளியாக பணிபுரிகிறார்.
எம்எஸ் தோனியின் தீவிர ரசிகரான ராபின் மின்ஸ்-க்கு, தோனியின் சிறுவயது பயிற்சியாளரான சஞ்சல் பட்டாச்சார்யாவே பயிற்சி அளித்து வருகிறார்.
இடது கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ராபின் மின்ஸ் ஜார்க்கண்ட் U19 அணிக்காக ஐந்து போட்டிகளில் விளையாடி மூன்று சதங்களை அடித்துள்ளார்.
கடந்த ஆண்டு கர்னல் சி கே நாயுடு டிராபியிலும் விளையாடினார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒடிசாவில் நடந்த ஒரு T20 போட்டியில் 35 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து ராபின் மின்ஸ் ஆட்டமிழக்காமல் இருந்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இவரின் திறமையை கண்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், அவருக்கு இங்கிலாந்தில் சிறப்பு பயிற்சி அளித்தது.
இந்நிலையில், துபாயில் நடந்த இந்த ஐபிஎல் மினி ஏலத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா, ராபின் மின்ஸை-யை 'இடது கை கீரன் பொல்லார்ட்' என்று வர்ணித்து அறிமுகப்படுத்தினார். அவரின் திறமையை இந்த 2024 ஐபிஎல் சீசனில் வெளிப்படுத்தி, இந்திய அணியில் இடம்பெற கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.