ஐ.பி.எல். 2025 : இதோ வெளியான முக்கிய தகவல்! - Seithipunal
Seithipunal


மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நிறைவடைந்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஐ.பி.எல் அணிகளின் 
உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுதொடர்பாக  விரிவாக ஆலோசித்து வருகிறது.  

இதன்  காரணமாக  ஐ.பி.எல். ரிடென்ஷன் பாலிசி விதிமுறைகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

மேலும்  பல்வேறு அணிகள் தரப்பிலும் அதிகளவிலான வீரர்களை ரிடென்ஷன் செய்யும் வகையில் விதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் எந்த அணிக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு முடிவுகளை எடுக்க பி.சி.சி.ஐ.-க்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2025 ஐ.பி.எல்.தொடர் வீரர்களுக்கான மெகா ஏலம்  நவம்பர் மாத இறுதியில் பி.சி.சி.ஐ. நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே போல் ரிடென்ஷன் விதிமுறைகள் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று  தகவல் வெளியாகியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL 2025 Here is the big news release


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->