ஐ.பி.எல்.2025 : மும்பை அணிக்கு விளையாடும் 5 வீரர்கள் இவர்கள் தான்! - ஹர்பஜன் சிங்!
Ipl 2025 these are the 5 players who will play for the mumbai team harbhajan singh
மும்பையில் ஐ.பி.எல். நிர்வாகம் மற்றும் அணிகளின் உரிமையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஐ.பி.எல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர். அப்போது பல்வேறு அணிகள் தரப்பிலும் ஏராளமான கருத்துகளை பெற்றுக் கொண்ட பிசிசிஐ, அதுதொடர்பாக விரிவாக ஆலோசித்து வருகிறது.
தொடர்ந்து 2025 ஐ.பி.எல்.தொடர் வீரர்களுக்கான மெகா ஏலம் நவம்பர் மாத இறுதியில் பி.சி.சி.ஐ. நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளதாவது, மும்பை இந்தியன்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடாத அணி என்றும், ஆனால் அவர்கள் மிகவும் சிறப்பான அணி என்று கூறியுள்ள அவர், நிச்சயம் அவர்கள் எதிர்காலத்திற்காக ஒரு அணியை உருவாக்க நினைப்பார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் மும்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நிச்சயம் நீக்க மாட்டார்கள் என்றும், பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் அணியில் இருப்பார்கள் என்றும், ஆனால் ரோகித் சர்மா தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விளையாடுவாரா என்பதுதான் கேள்வியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பை அணி ஐந்தாவது வீரராக திலக் வர்மாவாவை தக்க வைக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.
English Summary
Ipl 2025 these are the 5 players who will play for the mumbai team harbhajan singh