ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை 90 ரன்னுக்கு மேல் அடித்து சதத்தை தவறவிட்ட வீரர்கள் இவர்கள்தான்.!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் சீசன் 15 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற 31 ஆவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. இதில் பெங்களூர் அணி கேப்டன் பாப் டுபிளசிஸ் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 4 ரன்னில் தனது சதத்தை கோட்டை விட்டார். 

இதேபோன்று ஐபிஎல் வரலாற்றில் பல வீரர்கள் 90 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டுள்ளனர்.  அவர்களின் பட்டியலைப் பார்ப்போம். ஐபிஎல்லில் அதிகமுறை 90 ரன்கள் அடித்து சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தவர் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் தான். அதிகபட்சமாக 5 முறை 90 ரன்கள் எடுத்துள்ளார். இவரை தொடர்ந்து கேஎல் ராகுல் 5 முறை 90 ரன்கள் எடுத்துள்ளார். ஷிகர் தவன் மூன்று முறை 90 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். 

விராட் கோலி நான்கு முறை 90க்கு மேல் அடித்து சதத்தை தவறவிட்ட உள்ளார். இதே போன்று கிறிஸ் கெயிலும்  நான்கு முறை சதத்தை தவறவிட்டார். மேக்ஸ்வெல் மூன்று முறை 90க்கு மேல் அடித்த சதத்தை தவறவிட்டார். வாட்சன் மூன்று முறையும் சதத்தை தவறவிட்டுள்ளனர்.  90க்கு மேல் அடித்து சதத்தை அதிகமுறை தவறவிட்ட கேப்டனாக டேவிட் வார்னர் உள்ளார். விராட் கோலி ஒரு முறையும், ரோகித் சர்மா ஒரு முறையும், கேஎல் ராகுல் ஒரு முறையும்,  பாப் டுபிளசிஸ் முறையும் கேப்டனாக சதத்தை தவறவிட்ட உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL most times players missed century


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->