ஐபிஎல்லின் மதிப்புமிக்க அணி எது தெரியுமா.? ஃபோர்ப்ஸ் நிறுவனம் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் 15-வது சீசன் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடப்பு சீசனில் சேம்பியன் அணிகளான மும்பை சென்னை அணிகள் புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் உள்ளன. குறிப்பாக மும்பை அணி விளையாடி உள்ள 8 போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது.

இந்த நிலையில் ஐபிஎல் அணிகளின் விலைமதிப்பு பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி,

மும்பை இந்தியன்ஸ் அணி 9,962 கோடி மதிப்புடன் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8,811 கோடி மதிப்புடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8,428 கோடி மதிப்புடன் 3-வது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 8,236 கோடி மதிப்புடன் 4-வது இடத்திலும் உள்ளது.

டெல்லி கேப்பிடல் அணி 7,930 கோடி மதிப்புடன் 5வது இடத்திலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7,432 கோடி மதிப்புடன் 8வது இடத்திலும் உள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி 7,087 கோடி மதிப்புடன் 9வது இடத்திலும், குஜராத் டைட்டன்ஸ் அணி ஆர் 6,512 கோடி மதிப்புடன் 10-வது இடத்திலும் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL most valuable team


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->