ஐபிஎல் ஏல வரலாற்றின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்த வீரர்.! சிஎஸ்கே To லக்னோ.! - Seithipunal
Seithipunal


சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத ஒரு வீரர், 10 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கும் சம்பவம், இந்த பதினைந்தாவது ஐபிஎல் ஏலத்தில் அரங்கேறியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளில் கடந்த முறை டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடி,  தனது சிறப்பான பந்துவீச்சை அவேஷ் கான் வெளிப்படுத்தினார். 

சுமார் 140 கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் அவேஷ் கான் பந்துவீசி, முன்னணி பேட்ஸ்மேன்களை திணறடித்தார்.

இந்த நிலையில், பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான ஏலம் நேற்று பெங்களூர் தனியார் ஹோட்டலில் தொடங்கியது.

இதில், அவேஷ் கானை ஏலத்தில் எடுப்பதற்கு பல அணிகளும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு ஏலம் கேட்டனர்.

அடிப்படையான 20 லட்சத்தில் இருந்து உயர்ந்த அவரின் மதிப்பு, 10 கோடியில் வந்து நின்றது. லக்னோ அணி விடாமல் அவரை எடுத்தாக வேண்டும் என்று போட்டி போட்டது. இதன் பலனாக லக்னோ அணி 10 கோடி ரூபாய் கொடுத்து அவேஷ் கானை ஏழாம் எடுத்துள்ளது.

இதில் ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்றும், சாதனை ஒன்றும் உள்ளது. அவேஷ் கான் இதுவரை சர்வதேச போட்டிகளில் விளையாட ஒரு வீரர் ஆவார். அதுதான் இப்போது சாதனையாகவும் மாறியுள்ளது.

ஆம், சர்வதேச விளையாட்டில் விளையாடாமல் அதிக தொகைக்கு ஏலம் போனவர் என்ற சாதனையை தற்போது அவேஷ் கான் படைத்துள்ளார்.

முன்னதாக கிருஷ்ணப்பாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு 9.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதுவே அதிகத் தொகையாக இருந்து வந்த நிலையில், தற்போது அதனையை அவேஷ் கான் முறியடித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL2022Auction AveshKhan MostExpensive


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->