ஐ.எஸ்.எல். கால்பந்து அட்டவணை வெளியீடு.....சென்னை எப்.சி எப்போது களமிறங்கும்? - Seithipunal
Seithipunal


இந்தியன் சூப்பர் லீக் தொடரான  ஐ.எஸ்.எல் கால்பந்து 2024-25க்கான தொடர், வரும் செப்டம்பர் மாதம் 13-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மோகன் பகான் சூப்பர் ஜெயண்ட்ஸ், சென்னையின் எப்.சி,  மும்பை சிட்டி எப்.சி, பெங்களூரு எப்.சி உள்ளிட்ட 13 அணிகள் கலந்து கொள்ள உள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை  செப்டம்பர் 13ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரையிலான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 13ம் தேதி கொல்கத்தாவில் நடைபெறும் முதல் போட்டியில் மோகன் பகான் - மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதுகிறது. சென்னையின் எப்.சி அணி தனது முதல் ஆட்டத்தில் செப்டம்பர் 14ம் தேதி ஒடிசா எப்.சி அணியை புவனேஷ்வரில் எதிர்கொள்ள உள்ளது.  மேலும் இந்த சீசனில் புதிதாக முகமதின் ஸ்போர்ட்டிங்  அணி இணைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISL Football Schedule Released When will Chennai FC play


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->