ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் - இன்று மும்பை-பெங்களூரு அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடரில், இன்று மும்பை-பெங்களூரு இடையிலான அணிகள் மோதுகின்றன.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் கடந்த 13-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த தொடரின் ஆட்டத்தில் கோவா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா சிறப்பாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் மும்பையில் இன்று இரவு நடைபெற உள்ள ஆட்டத்தில் மும்பை-பெங்களூரு இடையிலான அணிகள் மோதுகின்றன.

பெங்களூரு அணி 3 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள நிலையில், மும்பை அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. இந்த சூழலில் மும்பை அணி எழுமா அல்லது பெங்களூரு அணி தொடர்ந்து முன்னேறி செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISL football series mumbai bangalore teams clash today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->