நாளை தொடங்கும் இறுதி போட்டி.. ரோகித் ஷர்மாவுக்கு திடீர் காயம்.. என்னாச்சு.!! வெளியான புது அப்டேட்..!!
It is reported Rohit Sharma is not major injured
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி நாளை லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கும் இறுதி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இறுதி போட்டிக்கான பயிற்சியின்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு இடது கை கட்டை விரலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது காயத்தின் மீது டேப் செய்து கொண்டு பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறியது பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளை தொடங்க உள்ள உள்ள இறுதிப்போட்டியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதன் முதலில் வெல்ல இரு அணிகளும் மும்முரம் காட்டி வரும் நிலையில் இந்திய அணியின் கேப்டனுக்கு கையில் காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் இந்திய ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த நிலையில் தற்போது ரோகித் ஷர்மாவுக்கு இடது கை கட்டை விரலில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனவும், தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும், காயம் குறித்து ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடவில்லை எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
English Summary
It is reported Rohit Sharma is not major injured