இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்.. ரேஸில் இரண்டு முன்னாள் வீரர்கள்.. ஜெய் ஷா அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal



இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக தற்போது முன்னாள் இந்திய அணி வீரர் ராகுல் டிராவிட் உள்ளார். இவரது பயிற்சியில் தான் இந்திய ஆடவர் அணி தற்போது அமெரிக்காவில் நடைபெற்ற T 20 உலகக் கோப்பை தொடரில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி உள்ளது.

இந்நிலையில் ராகுல் டிராவிட் தனது பயிற்சியாளர் பணியை இந்த T 20 உலகக் கோப்பை தொடருடன் நிறைவு செய்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே இந்திய ஆடவர் அணிக்கான புதிய தலைமைப் பயிற்சியாளர் தேர்வு குறித்து ஆலோசிக்கப் பட்டு வந்ததாகத் தெரிகிறது.

அதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் நியூசிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா இதுகுறித்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், "இந்திய அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் நடத்தி இருவரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவர்களில் ஒருவர் தான் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப் படுவார். மேலும் புதிய பயிற்சியாளர் இந்திய அணியின் இலங்கை பயணத்தில் இருந்து பொறுப்பேற்பார்" என்று தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கவுதம் கம்பீர் மற்றும் ராமன் ஆகிய இருவரின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jai Shah Announced about Indian Cricket Team New Head Coach


கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா இரண்டாவது முறையாக டி-20 உலக கோப்பையை வென்றதற்கு காரணம்?




Seithipunal
--> -->