IPL2023 : ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால்.!
Jaiswal most runs in single season uncapped player
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நாளையுடன் லீக் போட்டிகள் முடிவடைய உள்ளது. இதில் தற்போது வரை குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மீதமுள்ள 3 இடங்களுக்கு சென்னை, லக்னோ, மும்பை, பெங்களூர், கொல்கத்தா, ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அதேபோல், டெல்லி, ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் ஆகிய 3 அணிகள் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.
இதில், இந்த சீசனில் 14 லீக் போட்டியில் விளையாடியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்ற 14 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுமா? என்பது மீதமுள்ள லீக் போட்டிகளின் முடிவளை பொறுத்து தான் தெரியும்.
இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் (வயது 21). இந்தத் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 625 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 48.08 ஆகும். மேலும் ஸ்ட்ரைக் ரேட் 163.61. மேலும் 14 போட்டிகளில் ஒரு சதம் மற்றும் 5 அரை சதம் எடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அதிகபட்சமாக 82 பவுண்டர்களும், 26 சிக்ஸர்களும் விளாசியுள்ளார்.
இந்த நிலையில் ஐபிஎல் வரலாற்றில் தேசிய அணியில் இடம் பெறாமல் ஒரு சீசனில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை ஜெய்ஸ்வால் படைத்துள்ளார். அந்த வகையில் இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஷான் மார்ஸ் கடந்த 2008 ஐபிஎல் தொடரில் 616 ரன்கள் அடித்தது அதிகபட்சமாக இருந்தது. தற்போது இந்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம்வீரர் ஜெய்ஸ்வால் முறியடித்துள்ளார்.
English Summary
Jaiswal most runs in single season uncapped player