#WorldCup2023 || ஒரே பந்தில் 2 வரலாற்று சாதனை! ஜஸ்பிரித் பும்ரா, விராட் கோஹ்லி அசத்தல்!
JaspritBumrah ViratKohli create historical records in one ball
2023 உலக கோப்பை தொடரில் இந்தியா எதிர் கொண்ட முதல் போட்டியிலேயே ஜஸ்பிரித் பும்ரா மற்றும் விராட் கோலி சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவில் தொடங்கியுள்ள உலகக் கோப்பையின் 5வது போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று எதிர் கொண்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய ஓபனர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கிய நிலையில் இந்திய அணி தரப்பில் 2வது ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீச மிட்செல் மார்ஷ் பேட்டில் எட்ஜ் பட்ட பந்து விராட் கோலியின் பக்கவாட்டில் செல்ல அதை அவர் தாவி பிடித்தார்.
இதன் முலம் 6 பந்துகளை எதிர்கொண்ட மிட்செல் மார்ஷ் ரன் எதுவும் எடுக்காமல் டக்அவுட்டானார். மிட்செல் மார்ஷ் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் ஆஸ்திரேலிய அணியின் ஓப்பனர் பேட்ஸ்மேனை டக்அவுட்டாக்கிய வீரர் என்ற புதிய வரலாறு சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார்.
அதேபோன்று இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பைகளில் அதிக கேட்ச் பிடித்த விக்கெட் கீப்பர் அல்லாத இந்திய வீரர் என்ற சாதனை விராட் கோலி படைத்துள்ளார். கோலியை தொடந்து அனில் கும்ப்ளே, கபில்தேவ், சச்சின் டெண்டுல்கர் முறையே அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
JaspritBumrah ViratKohli create historical records in one ball