ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை.. இந்தியா - வங்காளதேசம் இன்று மோதல்!
Junior Womens T20 World Cup India vs Bangladesh clash today
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் போடியில் மோதிவருகின்றன . இதையடுத்து லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின.இதில் 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி பிரிக்கப்பட்ட குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட்இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன. இதையடுத்து இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். அதனை தொடர்ந்து இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.இந்தநிலையில் சூப்பர் 6 சுற்று ஆட்டங்கள் நேற்று தொடங்கின.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை இன்று எதிர்கொள்கிறது. கோலாலம்பூரில் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி பகல் 12 மணியளவில் நடைபெற உள்ளது.
English Summary
Junior Womens T20 World Cup India vs Bangladesh clash today