இந்த உலக கோப்பைக்கு இந்திய அணியில் இவரை எடுக்காதிங்க! தப்பாகிடும் வேணாம் - எச்சரிக்கும் முன்னாள் வீரர்! - Seithipunal
Seithipunal


கடந்த உலக ஐசிசி டெஸ்ட் சாம்பியன் தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இதற்க்கு காரணம் அணி வீரர்களின் தேர்வுதான் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக உலகின் நம்பர் ஒன் பவுலர் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுத்திருக்க வேண்டும் என்றும், கில் உள்ளிட்ட சில வீரர்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களை ஏன் aniyiல் எடுத்தனர் என்றும் விமர்சனம் செய்தனர்.

இது குறித்து அண்மையில் அஸ்வின் ரவிச்சந்திரன் நடித்த பேட்டையில் பேட்டியில், "ஒரு ஆட்டம் தோல்வியில் முடிந்த பிறகு, அணியில் இவரை எடுத்து இருக்கலாம், இவரை எடுத்திருக்கக் கூடாது என்று பேசி எந்த புண்ணியமும் இல்லை. அடுத்த வர கூடிய உலகக் கோப்பை தொடரில் அதே தவறை செய்யக்கூடாது. சரியான முடிவை எடுக்க வேண்டும்" என்று அஷ்வின் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.

இன்னும் ஒரு சில வாரங்களில் உலக கோப்பை ஒருநாள் தொடரில் பங்கேற்க கூடிய இந்திய அணி வீரர்களின் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இஷான் கிஷனுக்கு பதில் சஞ்சு  சாம்சனை களம் இருக்கலாம் என்று, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..

மேலும், முகமது கைஃப் தெரிவிக்கையில், "வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இரண்டு விக்கெட் விழுந்த போதும், அவர் மிடில் ஓவர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை பார்த்து நான் வியந்து போனேன்.

சஞ்சு சாம்சனின் ஆட்டத்தால் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும் ன்று நான் நம்புகிறேன். உலகக்கோப்பை தொடருக்கு அவர் தயாராகிவிட்டார். மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக இஷான் கிஷனையோ, அக்சர் பட்டேலேயோ களம் இறக்கினால் அது தவறான முடிவாக அமையும்.

நான்காவது இடத்தில் களம் இறங்கக்கூடிய வீரர் சுழல் பந்து வீச்சை எதிர்த்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். 

என்னை பொறுத்தவரை சுழற் பந்துவீச்சாளர்களை சரியான முறையில் கையாண்டு ரன்களைக் குவிக்கும் சஞ்சு சாம்சனை களம் இறக்குவதே நல்ல முடிவாக அமையும்.

மேலும், இடது கை சுழற் பந்துவீச்சாளர்களை சமாளித்து ரன் சேர்க்கும் திறமை உள்ள சஞ்சு சாம்சன் விஷயத்தில், அணியின் தேர்வு குழு சரியான முடிவு எடுக்க வேண்டும்" என்று முகமது கைஃப் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaif say About ICC WC 2023 Team India


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->