ஆர்சிபி-யை அடித்து துவைத்த கே.எல் ராகுல்; பெங்களூரை வீழ்த்தி அபார வெற்றிப்பெற்ற டெல்லி..! - Seithipunal
Seithipunal


ஐ.பி.எல் தொடரில் இன்றைய லீக் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டில்லி மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல் முதலில் 'பவுலிங்' தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் களமிறங்கிய பெங்களூரு அணிக்கு சால்ட் மற்றும் கோஹ்லி களமிறங்கினர். இதில் சால்ட் 37 ரன்கள் எடுத்து இருந்த போது ரன் அவுட் ஆனார். 22 ரன்கள் எடுத்து இருந்த கோஹ்லி ஆட்டமிழந்தார். படிக்கல் 01 ரன்னிலும், லிவிங்ஸ்டன் 04 ரன்களிலும், ஜிதேஷ் சர்மா 03 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் கேப்டன் ரஜத் பட்டிடர் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக, க்ருனால் பாண்டியா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 07 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் இறங்கிய டில்லி அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஸ்டப்ஸ் 38 ரன்கள் எடுத்தார். இறுதியில் டில்லி அணி 17.5 ஓவர்களில் 04 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது இதன் மூலம் 06 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

டெல்லி தரப்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் மற்றும் விப்ராஜ் நிகாம் ஆகியோர் தலா 02 விக்கெட்டுகள் வீழ்த்தினர். பெங்களூரு அணியின் சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர் குமார் 02 விக்கெட்டுகளும், யாஸ் தயாள் மற்றும் சுயாஸ் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KL Rahul brilliant performance Delhi defeated Bangalore to win the match


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->