திடீர் தற்காலிக கேப்டனாக செயல்பட்ட கே.எல்.ராகுல்! ஏன் தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


உலக கோப்பையில் இன்றைய போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணிகள் தர்மசாலா மைதானத்தில் விளையாடி வருகின்றன. இந்த போட்டி தொடரில் தோல்வியை பெறாத அணி என்ற பெருமையை இந்தியாவும் நியூசிலாந்தும் தன் வசம் வைத்திருக்கிறது. 

இன்றைய போட்டியில் ஏதேனும் ஒரு அணி தோல்வியை சந்தித்தே ஆகவேண்டும் என்பதாலும், தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை யார் தக்க வைப்பார் என்பதாலும் ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என எதிர்பார்க்கப்பட்டது. 

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் காயம் காரணமாக ஹர்டிக் பாண்டியா விளையாடாத நிலையில், அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவும், முஹம்மது ஷமியும் அணிக்கு திரும்பியுள்ளனர். ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். 

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, டேவன் கான்வே, யங் களமிறங்கினர். நான்காவது ஓவரை முஹம்மத் சிராஜ் வீசிய நிலையில், அவருடைய பந்தில் ஸ்கொயர் லெக்கில் நின்ற ஸ்ரேயாஸ் அய்யரின் துடிப்பான கேட்சில் ஆட்டமிழந்தார். முகமது ஷமி தான் வீசிய முதல் பந்திலேயே வில் யங் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். 

10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் மட்டுமே எடுத்தது. 10 ஆவது ஓவரின் இறுதிப்பந்தில் பீல்டிங் செய்த ரோஹித் சர்மா கைவிரலில் காயமடைந்தார். துணை கேப்டனாக இருக்கும் ஹர்டிக் பாண்டியா ஏற்கனவே காயம் காரணமாக இந்த போட்டியில் களமிறங்கவில்லை. 

இதனையடுத்து, களத்தில் தற்காலிக கேப்டனாக ராகுல் செயல்பட்டார். ரோஹித் காயம் பெரிய அளவில் இல்லாததால் சில ஓவர்களில் களத்திற்கு திரும்பினார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

KL Rahul is the standing captain while Rohit injured


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->