ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார் கே.எல் ராகுல்..!!
KL Rahul left from IPL 2023 series
நேற்று முன்தினம் லக்னோ மைதானத்தில் நடைபெற்ற 43-வது ஐபிஎல் லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் முதல் இன்னிசை தொடங்கிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனைத் தொடர்ந்து 127 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததால் 19.5 ஓவரில் ஆல் அவுட் ஆனது. இதனால் பெங்களூர் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பில்டிங் செய்து கொண்டிருந்த லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுலுக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் ஆட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினார். பின்னர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கே.எல் ராகுலுக்கு தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடையில் ஏற்பட்ட காயத்திற்கு நாளை அவர் சிகிச்சைக்காக மும்பை செல்ல உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. கே.எல் ராகுல் தொலைவிலிருந்து வெளியேறியதால் லக்னோ அணியின் கேப்டனாக குருனால் பாண்டியா செயல்படுவார் என தெரியவந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் குருனால் பாண்டியா கேப்டனாக செயல்படுகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது.
English Summary
KL Rahul left from IPL 2023 series