இந்திய அணியின் தோல்விக்கு இது தான் காரணம்.. உண்மையை போட்டு உடைத்த கேப்டன் கே எல் ராகுல்.!! - Seithipunal
Seithipunal


இந்திய-தென் ஆப்ரிக்கா அணிகளுக்கு இடையிலான 3 ஒருநாள் போட்டிகள் தொடர் நேற்று தொடங்கியதுய். இதில், முதல் ஒரு நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. 

தென் ஆப்ரிக்கா அணியின் தொடக்க வீரர் குவிண்டன் டி காக் 27 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து மாலன் 6 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, பவுமா உடன் கைகோர்த்த ராசி வான் டெர் டுசென் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் சதம் விளாசினர்.பவுமா 110 ரன்னுக்கு அவுட்டாக, ரஸ்ஸி வான்டர் டுசென் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 129 ரன்கள் ஏடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி 4 விக்கெட்களை இழந்து 296 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து, இதனையடுத்து 297 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான கேஎல் ராகுல் 12 ரங்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அவரைத் தொடர்ந்து ஷிகர் தவானுடன் கைகோர்த்த, விராட் கோலி நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தனர். இவர்களுக்குள் ஒரு நல்ல பார்ட்னர்ஷிப் உருவாகியது. இதில் ஷிகர் தாவன் 79 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க, மறுமுனையில் ஆடிய விராட் கோலி தனது அரைசதத்தை பூர்த்தி செய்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் 16 ரன்னுக்கும், ஸ்ரேயாஸ ஐயர் 17 ரன்னுக்கும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அவர்களைத் தொடர்ந்து வெங்கடேஷ் ஐயர் இரண்டு ரன்னுக்கும், ரவிச்சந்திரன் அஸ்வின் 7 ரன்னுக்கும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பிறகு களமிறங்கிய ஷர்துல் தாகூர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார். இருந்த போதிலும் இந்திய அணியை வெற்றி பெற செய்ய முடியவில்லை. 33 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இதையடுத்து, இந்திய அணி கேப்டன் கே.எல் ராகுல் தோல்வி குறித்து போட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த போட்டியின் மூலம் நாங்கள் அதிகமான விஷயங்களை கற்றுக்கொள்ளும். துவக்கம் எங்களுக்கு மிக சிறப்பாக இருந்தது. ஆனால் மிடில் ஓவர்களில் எங்களால் விக்கெட்டை எடுக்க முடியவில்லை. மிடில் ஓவர்களில் விக்கெட் விழுந்த தவறியதால் தென் ஆப்பிரிக்க அணி 20 முதல் 25 ரன்கள் கூடுதலாக எடுத்து விட்டது. இந்த இலக்கை எளிதாக எட்ட முடியும் என்று நினைத்தேன். 

கோலியும், தவானும் ஆடுகளம் பேட்டிங்கிற்கு உள்ளது என கூறினார். ஆனால் மிடில் ஆர்டரில் சொதப்பிவிட்டோம். தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் மிக சிறப்பாக செயல்பட்டு, முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினர். மிடில் ஆர்டரில் எங்களுக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவில்லை. ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிக முக்கியமானது. எங்களால் முடிந்தவரை ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிக்காக போராடுவோம். அதற்காக தான் இங்கு வந்துள்ளோம். கடந்த வருடத்தில் நாங்கள் அதிகமான ஒருநாள் போட்டியை விளையாடவில்லை. அடுத்த உலக கோப்பை தொடரில் எங்களது கவனம் உள்ளது. அதற்கு முன்னதாக சிறந்த ஆடும் லெவனில் தயார்படுத்தி கொள்வோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kl rahul press meet on jan 19


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->