ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்.. ரஜினிகாந்த் -குல்தீப் யாதவ் வைரல் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்துடன் இந்திய வீரர் குல்தீப் யாதவ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்டு தொடரில் விளையாடி வருகிறது. 

இதில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையான முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் வெக்கிறான முதல் ஒருநாள் போட்டியை சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டு களித்தார். முன்னதாக மும்பை வந்த நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மனைவி லதா ரஜினிகாந்தை மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்த நிலையில் இந்தப் போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் வீரர்கள் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அது வகையில் இந்தியா கிரிக்கெட் வீரர் குல்தீப் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே தலைவர்" என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போதைய இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kuldeep yadav meet superstar Rajinikanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->