கடைசி டி20 போட்டி!...இன்று இந்தியா-வங்காளதேச அணிகள் மோதல்! - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, இந்தியாவுடனான கடைசி டி20 தொடர் ஆட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச கிரிக்கெட் அணி, 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது.  

சென்னையில் நடைபெற்ற முதலாவது டெஸ்டில்  2-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. இதையடுத்து இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான கடந்த 6-ம் தேதி நடைபெற்ற டி20 தொடரில்,  11.5 ஓவர்களில்  3 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வங்காளதேசத்தை எளிதில் வீழ்த்தி, இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இந்த நிலையில், இந்தியா-வங்கதேசம் இடையேயான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது. ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இரு அணிகள் மோதும் போட்டி நடைபெறுகிறது.

இதற்கிடையே வங்காளதேச அணி வீரர் மஹ்மதுல்லா டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்று  வரும் நிலையில், ஐதராபாத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 கிரிக்கெட் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Last t20 match india bangladesh clash today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->