மும்பை இந்தியன்ஸ் அணியை பதம்பார்த்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்.!!
LSG vs MI Match LSG Win
ஐபிஎல் தொடரின் 37 வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. அதில் கேப்டன் கேஎல் ராகுல் 68 பந்துகளில் 12 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இறுதிவரை இருந்தார். மும்பை அணி சார்பில் பொல்லார்டு, மெரிடித் தலா இரண்டு விக்கெட்டுக விக்கெட்டுகளை, டேனியல் சாம்ஸ், பும்ரா தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இஷன் கிஷன் 8 ரன்னிலும், ப்ரெவிஸ் 3 ரன்னிலும், சூர்யகுமார் யாதவ் 7 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ரோகித் சர்மா நிதானமாக ஆடி 39 ரன்களை எடுத்து வெளியேறினார்.
இதையடுத்து, திலக் வர்மா, பொல்லார்டுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி பொறுப்புடன் ஆடியது. திலக் வர்மா 38 ரன்னில் வெளியேறினார். பொல்லார்டு 19 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில் மும்பை இந்தியன்ஸ் அணி 132 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதன்மூலம் லக்னோ அணி 36 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. மும்பை அணி தொடர்ந்து எட்டாவது தோல்வியை சந்தித்துள்ளது.