மார்கஸ் ஸ்டோய்னிஸ் சதம்..லக்னோ அணி அபார வெற்றி.!!
Lsg won the match
17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 39வது லீக் போட்டியில் சென்னை அணியும் லக்னோ அணியும் மோதுன.
டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய சென்னை அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கேட்களை இழந்து 210 ரன்களை எடுத்தது.
போட்டியின் இரண்டாம் பாதியில் 211 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 4 விக்கெட்டை இழந்து 19.3 ஓவர்களில் 213 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை அணி இந்த தொடரில் விளையாடிய 8 போட்டிகளில் 4 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது . லக்னோ அணி விளையாடிய இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.