ஐபிஎல் போட்டிக்கான.. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லோகோ அறிமுகம்.!
Lucknow super Giants introduced logo
லக்னோ அணியின் லோகோவை அணி நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.
ஐபிஎல் 14 வது சீசன் முடிந்த உடன் புதிய இரண்டு அணிகள் இணைக்கப்பட்டு, 15 வது சீசன் முதல் மொத்தம் 10 அணிகள் களமிறக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்தது. இந்த புதிய 2 அணிகளை ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்று முடிந்தது. அதில் லக்னோ, அகமதாபாத் அணிகள் தேர்வு செய்யப்பட்டது.
இந்த புதிய இரண்டு அணிகளுக்கு தரமான வீரர்கள் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக, மெகா ஏலத்திற்கு முன்பு பழைய 8 அணிகளும் விதிமுறைக்கு உட்பட்டு 4 பேரை தக்க வைக்க வேண்டும் என பிசிசிஐ தெரிவித்திருந்தது. அதன்படி அனைத்து அணிகளும் வீரர்களை தக்க வைத்தனர்.
இதையடுத்து, லக்னோ, அகமதாபாத் அணிகள் இரண்டு உள்நாட்டு வீரர்களையும், ஒரு வெளிநாட்டு வீரரையும் தக்க வைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியது.
லக்னோ அணியை பொறுத்தவரை கேஎல் ராகுல் கேப்டனாகவும், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய் ஆகியோரை தக்கவைத்துள்ளது. கேஎல் ராகுல் 17 கோடிக்கும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 9.2 கோடிக்கும், ரவி பிஷ்னோய் 4 கோடிக்கும் தக்க வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், லக்னோ அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் என்ற புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
English Summary
Lucknow super Giants introduced logo