வீரர்களுக்கு இணையான வீராங்கனைகளுக்கு சம்பளம் வரலாற்று சிறப்புமிக்க செயல் - மிதாலி ராஜ்.! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணி வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படும் என பிசிசிஐ எடுத்துள்ள நடவடிக்கைக்கு இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நன்றி தெரிவித்துள்ளார்.

உலக அளவில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக இருந்தாலும் இந்தியாவில் கிரிக்கெட்டை ரசிகர்கள் அதை ஒரு மதமாகவே கருதுகின்றனர். ஆனால் இந்தியாவில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், வீரர்களுக்கு மட்டுமே அதிக சம்பளம் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.

இந்த நிலையில் பாலின பாகுபாட்டை களையும் வகையில் பிசிசிஐ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு இனி ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படும் என பிசிசி அறிவித்துள்ளது.

அதன்படி டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சம், ஒரு நாள் போட்டிக்கு 6 லட்சம், டி20 போட்டிக்கு 3 லட்சம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த அறிவிப்பு இந்திய வீராங்கனைகளுக்கு இன்பதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வீரர்களுக்கு இணையான சம்பளம் வீராங்கனைகளுக்கு வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ள நிலையில் இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் 'வரலாற்று சிறப்புமிக்க இந்த செயல் மகளிர் கிரிக்கெட்டுக்கு புதிய விடியலாகும். இதற்காக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்' என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mithali Raj thanks to BCCI for same salary cricket


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->