அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா.? மாட்டாரா.? அவரே அளித்த பதில்.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.

அப்போது வர்ணனையாளர் இயன் பிஷப் தோனியிடம் அடுத்த சீசன் தங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பார்க்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.? அதற்கு பதில் அளித்த தோனி நிச்சயமாக என தெரிவித்துள்ளார்.

மேலும் அதற்கு காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருடம் மும்பையில் மட்டும் விளையாடிவிட்டு சென்னை ரசிகர்களுக்கு நன்றி சொல்லாமல் இருப்பதே நன்றாக இருக்காது. மும்பையில் எனக்கு ஒரு அணியாகவும், தனி மனிதனாகவும் நிறைய அன்பும், பாசமும் கிடைத்தது.

ஆனாலும் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களிடம் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. அடுத்த ஆண்டு வெவ்வேறு மைதானங்களில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும். அப்போது ஒவ்வொரு மைதானத்திற்கு சென்று அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ms Dhoni continue to play next season


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->