#IPL2023: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் யார்.. அணி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.!
Ms Dhoni lead Chennai super kings IPL 2023
இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் ஐபிஎல் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இருந்து இந்திய அணி வெளியேறிய நிலையில், ரசிகர்களின் கவனம் தற்போது ஐபிஎல் தொடர் மீது திரும்பி உள்ளது. மேலும் அதற்கான பணிகளை பிசிசிஐ-யும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஐபிஎல் மினி ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதி அன்று கொச்சியில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினி ஏலத்திற்காக ஒவ்வொரு அணியும் தங்களுடைய அணியில் இருந்து தக்கவைத்த மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை நேற்று வெளியிட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ்
தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
அம்பதி ராயுடு, தீபக் சாஹர், டெவோன் கான்வே, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, எம்.எஸ். தோனி, முகேஷ் சவுத்ரி, பிரசாந்த் சோலங்கி, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், ருந்துத்ராஜ் ஹங்கர்கேகர், , சிவம் துபே, சிமர்ஜீத் சிங், சுப்ரான்ஷு சேனாபதி, துஷார் தேஷ்பாண்டே
விடுக்கப்பட்ட வீரர்கள்:
ஆடம் மில்னே, சி.ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டன், டுவைன் பிராவோ, கே.பகத் வர்மா, கே.எம்.ஆசிப், என்.ஜெகதீசன், ராபின் உத்தப்பா.
இந்த நிலையில், சென்னை அணியின் கேப்டனாக தோனியே நீடிப்பார் என்று சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
2023 ஐபிஎல் குறித்து பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வீரர்களை விடுவித்தது கடினமான முடிவு. சென்னை அணிக்காக அவர்கள் அளித்த பங்களிப்பு எப்போதும் நினைவில் இருக்கும். அவர்களில் யாரையாவது ஏலத்தில் மீண்டும் எடுக்க வாய்ப்பு கிடைத்தால் அதை செய்வோம்.
2023-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணியை தோனியே வழிநடத்துவார். அவர் தனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என தெரிவித்துள்ளார்.
English Summary
Ms Dhoni lead Chennai super kings IPL 2023