ஐபிஎல் போட்டிகளுக்காக தீவிர வலைப்பயிற்சியில் தல தோனி.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் நடைபெறும் பிரம்மாண்ட கிரிக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 15 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் 16வது ஐபிஎல் சீசன் தொடங்கவுள்ளதாக கூறப்பட்டது.

இதனையடுத்து ஐபிஎல் 2023 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 25ம் தேதி கொச்சியில் நடைபெற்றது.

இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான 16வது ஐபிஎல் சீசன் போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மார்ச் 31 அல்லது ஏப்ரல் 1ம் தேதி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்க உள்ளது.

இதனையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் தற்போதே தீவிர வலை பயிற்சியை தொடங்கியுள்ளார்‌. தற்போது சிஎஸ்கே கேப்டன் தோனி பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MS Dhoni net practice video viral


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->