04 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி மும்பை வெற்றி; ஒரே ஒரு ரன்னுக்காக இவ்வளவு போராட்டமா?
Mumbai beat Hyderabad by 04 wickets
ஐபிஎல்-2025 இன் தொடரின் இன்றைய 33-வது லீக் போட்டியில் மும்பை அணி -ஐதராபாத் அணிகள் மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி, முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணியின் சார்ப்பாக, அபிஷேக் ஷர்மா 28 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷான், 3 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிஸ் ஹெட் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக, நிதிஷ்குமார் ரெட்டி, 21 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். ஹென்ரிச் க்ளாசென் 28 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் அனிகேட் வர்மா 3 சிக்சர் அடிக்க, ஐதராபாத் அணி 20 ஓவரில் 05 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி சார்பாக, வில் ஜாக்ஸ் 02, டிரென் போல்ட், பும்ரா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து, 163 ரன்களை வெற்றி இலக்கோடு களமிறங்கிய மும்பை அணியில் ரோஹித் சர்மா 10 ரன்களிலும், ரேயான் நிக்ல்டன் 31 ரன்களிலும், சூரியகுமார் யாதவ் 26 ரன்களிலும், வில் ஜாக்ஸ் 36 ரன்களிலும் , ஹர்திக்பாண்டியா 21 ரன்களிலும், ஆட்டமிழந்தனர்.

இறுதியில் 18.1 ஓவர்களில் 06 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து மும்பை அணி 04 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை வீழத்தி வெற்றிப்பெற்றுள்ளது. இதில் திலக் வர்மா 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் 03 விக்கெட்டுகளை வீழத்தியிருந்தார். போட்டியில் ஒரே ஒரு ரன் காக அடித்து ஆடிய ஹர்திக் ஆட்டமிழந்தமை,ரமந்திர் ஆட்டமிழந்தை உள்ளிட்ட விடையங்கள் மற்றும் அதற்காக ஒரு ஓவர் வரை காத்திருந்தமை போட்டியில் சுவாரஷ்யத்தை ஏற்படுத்தியது.
English Summary
Mumbai beat Hyderabad by 04 wickets