இந்த முறை உலகக் கோப்பையை வெல்வது இந்த அணிதான் - முத்தையா முரளிதரனின் அசத்தல் கணிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை, உலகக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடக்க உள்ளது.

இந்தியாவில் குஜராத், மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட 10 நகரங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா, இங்கிலாந்து (நடப்பு சாம்பியன்), ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.

இந்நிலையில், இந்திய அணிக்கு இந்த உலகக் கோப்பை தொடர் சாதகமாக அமையும் என்று, இலங்கை அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கணித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் பேட்டியில், "உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்திய அணிக்கே சாதகமாக அமையும்.

அதற்க்கு முக்கிய காரணம், இந்திய அணி சிறந்த அணியாக நிகழ்வதும், அவர்களின் சொந்த மண்ணில் ஆட உள்ளதும் தான்.

மேலும், இந்திய அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், இந்திய அணி வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும். 

இந்திய அணிக்கு அடுத்த இடத்திலஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு கோப்பையை வெல்லும் வாய்ப்பு உள்ளது" என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthaiya Muralitharan say about ICC WC 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->