விராட் கோலியின் இடத்திற்கு ஆசைப்படும் ஸ்ரேயாஸ் ஐயர்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தொடர் நாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் "என்னிடமோ அணியின் பயிற்சியாளர்களிடமுமோ நான் எந்தவித எதிர்பார்ப்பையும் வைத்திருப்பதில்லை. ஏனென்றால் அணியில் அந்த அளவுக்கு அதிகமான போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு வீரர்களும் ஆட்டத்தை வெல்லும் திறன் படைத்தவர்களாக உள்ளனர். மேலும் எனக்கு வழங்கப்படும் ஒவ்வொரு தருணத்தையும், வாய்ப்பையும் நான் அனுபவிக்க விரும்புகிறேன்.

ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் அதேசமயம் நான் பேட்டிங் செய்வதற்கு சிறந்த வரிசை எது என்று கேட்டால் மூன்றாவது வரிசையே சரியாக இருக்கும் என்று சொல்வேன்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த சில வருடங்களாக 3-வது வரிசையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி தான் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My best batting position 3 Shreyas iyer


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->