" என் பந்து வீச்சுக்கு என் அப்பா முக்கிய காரணம் " - அபிஷேக் ஷர்மா!!
My father is the main reason for my bowling Abhishek Sharma
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான் பந்து வீசுவேன் என்று எனக்கு தெரியாது. என் பந்துவீச்சுக்கு எனது அப்பா முக்கிய காரணம் என ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா என்று கூறியுள்ளார்.
மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்ட நடப்பு ஐபிஎல் தொடர் மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, கொல்கத்தா, ராஜஸ்தான், ஐதராபாத் மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
முதல் தகுதி சுற்றில் கொல்கத்தா அணியும் ஹைதராபாத் அணியும் மோதியது. அதில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.பின்னர் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் மோதியது. அதில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. இரண்டாவது தகுதி சுற்றி ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் அணியும் மோதியது. அதில் ஹைதராபாத் நீ வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இரண்டாவது தகுதி சுற்றில் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா நடத்து ஐபிஎல் தொடரில் முதன்முதலாக பந்துவீச்சு செய்தார். 4 ஓவர்கள் வீசிய அவர் 24 ரங்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டை கைப்பற்றினார்.
இது குறித்து அபிஷேக் ஷர்மா பேசுகையில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நான் பந்து வீசுவேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. நான் எனது பேட்டிங்காக நிறைய பயிற்சி செய்தேன். பந்து வீசுவதற்கு தற்போது எனது அப்பா என்னோடு சேர்ந்து உழைத்து வருகிறார். எனது அப்பாவை என் குறிப்பிடுவதில் மகிழ்ச்சி. என் பந்து வீச்சுக்கு என் அப்பா முக்கிய காரணம் என்று ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் ஷர்மா கூறியுள்ளார்.
English Summary
My father is the main reason for my bowling Abhishek Sharma