தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு.. யார் யாருக்கு என்னென்ன விருதுகள்? முழு விபரம்.! - Seithipunal
Seithipunal


விளையாட்டு துறையில் சாதனைபடைக்கும் வீரர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது. இந்த நிலையில் இந்தாண்டுக்கான விருதுக்கு தகுதியான வீரர், வீராங்கனைகளின் பெயர்களை ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தது.

இதனையடுத்து தற்போது இந்த ஆண்டுக்கான விருது பெறுவோரின் பட்டியலை இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை இளவேனிலுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30-ம் தேதி விளையாட்டு வீரர்களுக்கான தேசிய விருதை குடியரசுத் தலைவர் வழங்க உள்ளார்.

இந்திய விளையாட்டுத்துறையின் உயரிய விருதான மேஜர் தியான்சந்த் விருது தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரரான சரத் கமலுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது ;

அச்சந்தா சரத் கமல் ( டேபிள் டென்னிஸ்)

அர்ஜூனா விருது பெறுபவர்கள் ;

சீமா புனியா ( தடகளம்)
எல்தோஸ் பால் (தடகளம்)
அவினாஷ் முகுந்த் சேபிள் (தடகளம்)
லக்ஷ்யா சென் (பேட்மிண்டன்)
பிரணாய் (பேட்மிண்டன்)
அமித் (குத்துச்சண்டை)
நிகத் ஜரீன் (குத்துச்சண்டை)
பக்தி பிரதீப் குல்கர்னி (செஸ்)
பிரக்ஞானந்தா (செஸ்)
டீப் கிரேஸ் எக்கா (ஹாக்கி)
சுஷிலா தேவி (ஜூடோ)
சாக்ஷி குமாரி (கபடி)
நயன் மோனி சைகியா (லாவ்ன் பவ்ல்)
சாகர் கைலாஸ் ஓவல்கர் (மல்லகாம்ப்) இளவேனில் (துப்பாக்கி சுடுதல்)
ஓம்பிரகாஷ் மிதர்வா (துப்பாக்கி சுடுதல்)
ஸ்ரீஜா அகுலா (டேபிள் டென்னிஸ்) விகாஸ் தாக்கூர் (பளு தூக்குதல்) அன்ஷு (மல்யுத்தம்)
சரிதா (மல்யுத்தம்)
பர்வீன் (மல்யுத்தம்)
மானசி கிரிஷ்சந்திரா ஜோஷி (பாரா பேட்மிண்டன்)
தருண் தில்லான் (பாரா பேட்மிண்டன்)
ஸ்வப்னில் சஞ்சய் பாட்டீல் (பாரா நீச்சல்)
ஜெர்லின் அனிகா (பாரா பேட்மிண்டன்)

துரோணாச்சார்யா விருது பெறுபவர்கள் ;

ஜிவன்ஜோத் சிங் தேஜா (வில்வித்தை)
முகமது அலி கமர் (குத்துச்சண்டை)
சுமா சித்தார்த் ஷிரூர் (பாரா ஷூட்டிங்)
சுஜீத் மான் (மல்யுத்தம்)

வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருது பெறுபவர்கள் ;

அஸ்வினி அக்குஞ்சி சி (தடகளம்)
தரம்வீர் சிங் (ஹாக்கி)
பி சி சுரேஷ் (கபடி)
நிர் பகதூர் குருங் (பாரா தடகளம்)


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

National sports awards 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->