ரன்-அவுட் முறையில் அதிரடி மாற்றம்! அக்டோபர் முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்! - Seithipunal
Seithipunal


சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகள் நடைமுறைகள் அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்!

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தலைமையிலான கமிட்டி பரிந்துரை செய்த விதிமுறைகள் ஏற்றுக் கொண்டு ஐசிசி உத்தரவு பிறப்பித்தது.

பந்தில் உமிழ்நீர் தடவ நிரந்தர தடை!

கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு தடை இருந்து வந்தது. கொரோனா தாக்கம் குறைந்த போதிலும் கிரிக்கெட் பந்தில் உமிழ்நீர் பயன்படுத்துவதற்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது. 

நான்- ஸ்ட்ரைகரை ரன் அவுட்!

பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் பந்து வீசுவதற்கு முன்பே க்ரீஸை விட்டு வெளியேறும்போது, பவுலர் மன்கட் ரன்-அவுட் செய்வது அதிகாரப்பூர்வமாக ரன் – அவுட் ஆக கணக்கு.

 5 ரன்கள் போனஸ்!

பவுலர் பந்துவீச ஓடிவரும் போது, பேட்ஸ்மேன் கவனத்தை திசை திருப்ப நகர்ந்தால் அது பந்து டெட் பாலாக அறிவிக்கப்பட்டு, பேட்ஸ்மேன் அணிக்கு போனஸ்-ஆக ஐந்து ரன்கள் வழங்கப்படுகிறது. 

புதிய வீரரே ஆடுவார்!

பேட்ஸ்மேன் கேட்ச் ஆகும் போது, எதிர்முனையில் உள்ள வீரர் பேட்டிங் முனைக்கு ஓடி வந்துவிட்டால், அவரே அடுத்த பந்தை ஆடுவார். இனி அதற்கு தடை செய்யப்பட்டு புதிதாக களம் இறங்கும் வீரரே பந்தை ஆட வேண்டும். 

பால் வீசும் முன்பே ஸ்ட்ரைக்கரை ரன்-அவுட் செய்யலாம்!

ஒரு பந்து வீச்சாளர் தனது பந்து வீச்சுக்குள் நுழைவதற்கு முன்பு பேட்டர் விக்கெட்டுக்கு கீழே முன்னேறுவதைக் கண்டால், ஸ்ட்ரைக்கரை ரன்-அவுட் செய்ய முயற்சிக்கலாம். இந்த நடைமுறை இனி ‘டெட் பால்’ ஆகும். 

பீல்டிங் அணி எல்லை கோட்டிற்கு செல்ல வேண்டும் !

க பந்துவீச ஓர் அணி கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டால் முன்னதாக அபராதம் மட்டும், இதை மாற்றி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காவிட்டால், தாமதிக்கும் நேரத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு, ஆட்டத்தின் கடைசி பகுதியில், பீல்டிங் அணி, எல்லைக்கோடு அருகே நிறுத்தப்படும் ஒரு பீல்டர் மட்டுமே உள் வட்டத்தில் இருப்பார். 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் டைம் அவுட் குறைப்பு! 

ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் புதிதாக களம் இறங்கும் பேட்ஸ்மேன் பந்தை எதிர்கொள்வதற்கு 3 நிமிடமாக இருந்த நேரம் 2 நிமிடமாக குறைப்பு.

இந்த புதுவிதமான ஆட்டம் என்னும் விறுவிறுப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New rules and procedures in international cricket will be effective from October 1


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->