எதுவும் எங்களுக்கு சரியாக அமையவில்லை; ஏலத்தில் சரியான வீரர்களை எடுக்கவில்லை: சி.எஸ்.கே அணியின் பயிற்சியாளர் பிளமிங் கவலை..! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டிகளில் 05 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் போட்டிகளில் வழக்கத்திற்கு மாறாக மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 09 லீக் போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 07 தோல்வி மற்றும் 02 வெற்றி பெற்றுள்ளது. இதனால் வெறும் 04 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதன் காரணமாக சென்னை அணியின் பிளே ஆப் சுற்று வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டது.

ஐதராபாத் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி படுதோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையுள்ளதாவது:- 

ஐ.பி.எல். ஏலத்தில் மற்ற அணிகள் சிறந்த வீரர்களை எடுத்து இருக்கிறார்கள். நாங்கள் சரியான வீரர்களை எடுக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும், ஏலம் என்பது முழுமையான அறிவியல் இல்லை. மிருகம் போன்ற பாய்ச்சல் கொண்டது. 25 மணி நேரத்துக்குள் வீரர்களை வாங்குகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஏலத்தின் முடிவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் சோர்வடைகிறோம் என்றும், இருப்பினும் எங்களுக்கு ஒரு நல்ல அணி கிடைத்து இருப்பதாகவே நான் இன்னும் நினைக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நாங்கள் சிறந்த அணியாக மாறுவதற்கான தூரம் வெகுதொலைவில் இல்லையெனவும், முக்கிய வீரர்களின் காயத்தாலும், ஒரு சில வீரர்கள் பார்மை இழந்ததாலும் போட்டிக்கான திட்டத்தை உருவாக்க கடுமையாக போராடினோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன்,  அதிகமான மாற்றங்களை செய்தோம். ஒருவேளை நாங்கள் இல்லாத ஒன்றை தேட முயற்சித்து இருக்கலாம். எதுவும் எங்களுக்கு சரியாக அமையவில்லை. என்று தெரிவித்துள்ளார். அடுத்ததாக, நிச்சயமாக நாங்கள் எடுத்த முடிவுகள், அதனால் நடந்தவைகளுக்கு எங்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. அது 100 சதவீதம் என்னில் இருந்து தொடங்குகிறது என்று குறிப்பிட்ட அவர், எஞ்சிய ஆட்டங்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிப்போம் என்று பேசியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nothing went right for us We didnt take the right players in the auction CSK coach Fleming worries


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->