பாகிஸ்தான் அணியின் அரையிறுதிக்கு செல்ல இறுதி வாய்ப்பு!
Pakistan cricket team have last chance to enter semi final
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றத்தின் காரணமாக டி20 உலக கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது மற்ற அணிகளின் முடிவுகள் பொறுத்தே அமைந்துள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணி ஆடவுள்ள உள்ள அடுத்த மூன்று போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்திய அணி அடுத்த அனைத்து ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும். தென்னாபிரிக்கா அணி அடுத்து ஆட உள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்றால் 5 புள்ளிகளை மட்டுமே பெற்று இருக்கும். அதே போல் ஜிம்பாவே அணியும் அடுத்து ஆட உள்ள மூன்று போட்டிகளில் இரண்டில் தோற்க வேண்டும். இவ்வாறு பிற அணிகளின் ஆட்டம் முடிவுகள் அமைந்தால் மட்டுமே பாகிஸ்தானால் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும்.
அதேபோல் ஜிம்பாப்வே அணி தனது அடுத்த ஆட்டங்களில் வங்கதேசம், நெதர்லாந்து அணியை வீழ்த்தி, தென்னாப்பிரிக்கா அணி பாகிஸ்தான் அணியை தோற்கடித்தால் ஜிம்பாப்வே அணி அரை இறுதிக்கு தகுதி பெறும். எனவே நாளை நடைபெற உள்ள மூன்று போட்டிகளின் முடிவைப் பொறுத்தே பாகிஸ்தான் அணியின் அரையிறுதி கனவு அமைந்துள்ளது.
English Summary
Pakistan cricket team have last chance to enter semi final