பாகிஸ்தானுக்கு ஆப்பு வைத்த ஐசிசி!  - Seithipunal
Seithipunal


உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதன் மூலம் அரையிறுதி செல்லும் வாய்ப்பையும் பாகிஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. 

பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதிய இந்த லீக் ஆட்டத்தில், நியூசிலாந்தை டிஎல்எஸ் முறையில் 21 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீசி முடிக்கவில்லை என்றும், இரண்டு ஓவர்கள் தாமதமாக பாகிஸ்தான் அணி பந்துவீசியதாகவும் தெரிய வந்தது.

ஐசிசி நடத்தை விதி 2.22ன் படி, குறைந்தபட்ச ஓவர்-ரேட் குற்றங்கள் தொடர்பாக, ஒவ்வொரு ஓவருக்கும் வீரர்களின் போட்டி கட்டணத்தில் ஐந்து சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

அதன்படி, 2 ஓவர்கள் மெதுவாக பந்துவீசிய காரணத்துக்காக பாகிஸ்தான் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 10% அபராதமாக ஐசிசி விதித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan match ICC fee fine 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->