ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி.. இந்தியாவை வெளியேற்றிய பாகிஸ்தான் அணி.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதால் இந்தியா அணி ஆசியக் கோப்பையில் இருந்து வெளியேறியது.

நேற்று சூப்பர் 4 சுற்று 4வது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இதனை அடுத்து பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் விளையாட உள்ளது. இதனையடுத்து இந்திய அணி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan won against Afghanistan and qualified final


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->