இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகியான தமிழக வீரர் - தலைவரான பி.டி உஷா! - Seithipunal
Seithipunal


இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகளுக்கான தேர்தலில், ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வென்றவரும், 1984 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் 400 மீட்டர் தடை ஓட்டத்தில் நான்காவது இடம் பிடித்தவருமான கேரளாவைச் சேர்ந்த 58 வயதாகும் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி உஷா போட்டியின்றி தேர்வாவது உறுதியானது.

இந்நிலையில், இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக பி.டி.உஷா போட்டியின்றி இன்று தேர்வானார். இதன்மூலம் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையை பி.டி. உஷா பெற்றுள்ளார்.

மேலும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் செயலாளர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. துணைத் தலைவர் மற்றும் பல்வேறு பதவிகளுக்கு மொத்தம் 24 வேட்பாளர்கள் வேட்பமான தாக்கல் செய்தனர். மேலும் 4 செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு 12 பேர் போட்டியிட்டனர். இதன் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது. 

மூத்த துணைத் தலைவர் - அஜய் எச். படேல்

துணைத் தலைவர்கள் 
அ. ராஜலட்சுமி சிங் டியோ
பி. ககன் நரங்

பொருளாளர் - சஹ்தேவ் யாதவ்

இணைச் செயலாளர்கள்
தி. அலக்நந்தா அசோக்
பி. கல்யாண் சௌபே

செயற்குழு உறுப்பினர்கள் 
அ. அமிதாப் ஷர்மா
பி. பூபேந்தர் சிங் பஜ்வா
எல்.டி. ஜென். ஹர்பால் சிங்
ரோஹித் ராஜ்பால்
டோலா பானர்ஜி 
யோகேஷ்வர் தத்


விளையாட்டு வீரர்கள் ஆணைய உறுப்பினர்கள்
மேரி கோம்
சரத் கமல்
 

 

 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PTUsha wiil be elect president of the Indian Olympic Association 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->