என்னை ஒதுக்கி வைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது - இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை பூனம் ராவத் வேதனை.! - Seithipunal
Seithipunal


உலக்கோப்பை போட்டியின் இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து, இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரும், தொடக்க ஆட்டக்காரருமான பூனம் கணேஷ் ராவத், தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் மற்றும் இந்தியாவுக்காக தொடர்ந்து ரன் குவிப்பவர் என்று கருதப்பட்டதால், உலகக் கோப்பை அணியில் இடம் பெறாததில் நான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளேன்.  

2021 இல், நான் விளையாடிய ஆறு ஒருநாள் ஆட்டங்களில் ஒரு சதம் மற்றும் 2 அரை சதங்கள் உட்பட 295 ரன்கள் எடுத்திருந்தேன், 

சராசரியாக 73-75 இருந்துள்ளேன். நான் சிறப்பாக ஆடிவரும் நிலையில் என்னை தொடர்ந்து ஒதுக்கி வைப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.  

இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து வீரர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 

32 வயதாகும் பூனம் ராவத், இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்கி வருகிறார். இவர் இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 264 ரன்கள் குவித்துள்ளார். அதில், ஒரு சதமும் அடங்கும்.

மேலும் 73 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 2299 ரன்களை விளாசியுள்ளார். இதில் 3 சதங்களும், 15 அரை சதங்களும் அடித்துள்ளார். இதேபோல் 31 சர்வதேச டி20 போட்டிகளில்  விளையாடியுள்ள பூனம் 719 ரன்களை விளாசியுள்ளார். இதில் நான்கு அரை சதங்களையும் அவர் அடித்துள்ளார். அதிகபட்சமாக 75 ரன்களை அவர் எடுத்துள்ளார். 

அதுமட்டுமல்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் 4 விக்கெட்டுகளை தனது பந்து வீச்சின் மூலம் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PUNAM RAUT TWIT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->