இஸ்கான் அமைப்புக்கு தடை விதிக்க முடியாது - வங்காளதேச நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


வங்காளதேச உயர்நீதிமன்றம், இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகளை தடை செய்ய கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று நிராகரித்தது.

சமீபத்தில் இந்து அமைப்பின் தலைவரான சின்மய் கிருஷ்ண தாஸ், இஸ்கான் அமைப்பில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டில் பல்வேறு போராட்டங்கள் வெடித்தன.

இந்த போராட்டங்களில் அரசு வழக்கறிஞர் சைபுல் இஸ்லாம் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகள் சமூக அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என கூறி, வழக்கறிஞர் மொனிருதீன் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நிராகரித்த நீதிபதிகள், "இஸ்கான் அமைப்பின் செயல்பாடுகள் சமூக அமைதிக்கு எதிரானவை என உறுதியாக கூற முடியாது. எனவே, அமைப்புக்கு தடை விதிக்க முடியாது" என தெரிவித்தனர். மேலும், நாட்டில் சட்டம் ஒழுங்கை உறுதிசெய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் வலியுறுத்தினர்.

இந்த தீர்ப்பு வங்காளதேசத்தில் மத மற்றும் சமூக அமைதிக்கான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISKCON cannot be banned Bangladesh court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->