இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகலா.? ராகுல் டிராவிட் வெளியிட்ட தகவல்.!! - Seithipunal
Seithipunal


கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்தாண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்தாவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெறுகிறது. இதனிடையே இந்திய கேப்டன் ரோகித் சர்மாவிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால்  அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 

இதனால் அவர் டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவருக்கு பதில் இந்திய அணியை வழிநடத்த போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ரோகித் சர்மாவிற்கு பதிலாக துணை கேப்டனான பும்ரா கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். இன்னும் 2 மருத்துவ சோதனைகளின் முடிவுகளை பொறுத்தே ரோகித் சர்மா விலகுவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rahul dravid says about rohit sharma for england test


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->