ஒருநாள் அணிக்கும் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் - ரவி சாஸ்திரி.! - Seithipunal
Seithipunal


ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான இந்திய அணிக்கு ஹார்திக் பாண்டியாவை நியமிக்க வேண்டுமென இந்தியர்களின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

இந்திய அணி உள்ளூர் மற்றும் வெளியூர் தொடர்களில் சிறப்பாக விளையாடினாலும் ஐசிசி தொடர்களில் கோட்டை விட்டு விடுகிறது. அந்த வகையில் கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் வெல்லவில்லை.

இதில், சமீபத்தில் நடைபெற்ற முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. அதன் பிறகு இந்திய அணியை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டன் மற்றும் அணி வீரர்களின் தேர்வில் கவனம் தேவை எனவும் சீனியர் வீரர்களை நீக்கிவிட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்திய அணி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், 'இந்தாண்டு உலக கோப்பைக்கு பிறகு டெஸ்ட் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

அதேபோல் இந்திய அணியில் உள்ள சீனியர் வீரர்களை வெளியேற்றி இளம் திறமையான வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்க வேண்டும். குறிப்பாக ஒரு நாள் டி20 கிரிக்கெட் போட்டிகள் சமயத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் கொடுப்பது அணிக்கு மிகவும் நல்லது' என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravi Shastri said Hardik Pandya should Indian team captain


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->