ஆசிய கோப்பையில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் விலகல்.. இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு.! - Seithipunal
Seithipunal


ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் காயம் காரணமாக ரவீந்திர ஜடேஜா விலகல் என பிசிசிஐ அறிவித்துள்ளது.
 
15வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6 அணிகள் கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போட்டிகள் துபாய் மற்றும் ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

 இதில், முதல் சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ளது. இதில் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

இந்த நிலையில், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜாவுக்கு வலது முழங்காலில் காயம் ஏற்பட்டதால், அவர் போட்டியில் இருந்து விலகினார்.

அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார். இதனால் ஆசிய கோப்பை இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மற்றொரு ஆல் ரவுண்டரான அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் அக்சர் படேல் முன்னதாக அணியில் காத்திருப்பு வீரர்களில் ஒருவராக இருந்த நிலையில், விரைவில் துபாயில் இந்திய அணியில் இணைவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ravindra jadeja ruled out in Asia Cup 2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->