எலிமினேட்டர் சுற்று.. வெளியேறிய லக்னோ அணி.. தோல்வி குறித்து கே எல் ராகுல் பேட்டி.!
RCB win KL Rahul Press Meet
ஐபிஎல் நடப்பு கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்தது. இதனைத்தொடர்ந்து, 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டி காக் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். மனன் வோரா 19 ரன்களில் வெளியேறினார். கேப்டன் ராகுல் பொறுப்புடன் ஆடி அரை சதத்தை அடித்தார். அவருடன் தீபா ஹூடா நன்றாக விளையாடினார். அதன்பிறகு தீபா ஹூடா 45 ரன்களில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். தனி ஆளாக போராடிய கேஎல் ராகுல் 79 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில் லக்னோ அணி 6 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 14 வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறியது.
தோல்வி அடைந்த லக்னோ அணி போட்டியை விட்டு வெளியேறி உள்ளது. இதையடுத்து, தோல்வி குறித்து லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் கூறியதாவது, எங்கள் அணி 146 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததற்கு மோசமான பீல்டிங் தான் காரணம். முக்கியமாக கேட்சுக்களை தவிர விட்டதும் வெற்றி பெறுவதற்கான காரணமாகும். நாங்கள் வெற்றி வெற்றி பெறுவதற்கான காரணங்கள் இது மிகவும் வெளிப்படையானது.
எளிதான கேட்ச்களை விட்டது ஒருபோதும் உதவாது. முதல் மூன்று இடங்களில் உள்ள ஒருவர் சதம் அடித்தால், அந்த அணி பெரும்பாலும் வெற்றி பெறும். நாங்கள் நிறைய நேர்மறை எண்ணங்களை திரும்பப் பெறுவோம். நாங்கள் நிறைய தவறுகளை செய்து உள்ளோம். ஒவ்வொரு அணியும் இதை செய்கிறது. இது ஒரு இளம் அணி. அவர்கள் தங்கள் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
English Summary
RCB win KL Rahul Press Meet