சவுரவ் கங்குலியின் பதவிக்காலம் முடிவு.. அடுத்த பிசிசிஐ தலைவர் யார்.?
Roger Binny possible to next BCCI president
பிசிசிஐ அடுத்த தலைவராக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியும், செயலாளராக ஜெய்ஷாவும் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாதத்துடன் பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளர் பதவி காலம் முடிவடைய உள்ளது.
கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஐசிசி தலைவருக்கான தேர்வு நவம்பரில் நடைபெற உள்ளது இதனையடுத்து பிசிசி தலைவர் தேர்தலில் அவர் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர், செயலாளர், துணைத் தலைவர், இணை செயலாளர், பொருளாளர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து பிசிசி தலைவர் பதவிக்கு கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும், பிசிசிஐ-யின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். 1983 ஆம் ஆண்டு இந்தியா ஒருநாள் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த பின்னி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Roger Binny possible to next BCCI president