இந்திய அணி வெற்றி குறித்தும், ரவி பிஷ்னோய் எதிர்காலம் குறித்தும் ரோகித் சர்மா கருத்து.!
rohit shama says about ravi bishnoi
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி சார்பில் ரவி பிஷ்னோய், ஹர்சல் படேல் தலம் 2 விக்கெட்களையும், புவனேஷ் குமார், தீபக் சாஹர், சஹால் தலா ஒரு விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதில், ரவி பிஷ்நோய் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ரவி பிஷ்னோய் மிகவும் திறமையான பையன்.
அதனால்தான் நாங்கள் அவரை உடனடியாக அணியில் சேர்த்தோம். அவரிடம் வித்தியாசமான ஒன்றைக் காண்கிறோம். அவரிடம் நிறைய மாறுபாடுகள் மற்றும் திறமைகள் உள்ளது. அவரால் எந்த நிலையிலும் பந்து வீச முடியும். அவருக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
போட்டியை நாங்கள் சீக்கிரம் முடித்து இருக்க வேண்டும். இந்த வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த ஆட்டம் அதிக நம்பிக்கையை தருகிறது. பந்துவீச்சாளர்களின் பெருமுயற்சியால் வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது என தெரிவித்துள்ளார்.
English Summary
rohit shama says about ravi bishnoi